சமீபத்திய செய்திகள்

டைரக்டருக்கு ‘கார்’ பரிசளித்த உதயநிதி…

சென்னை:-உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடித்துள்ள படம், இது கதிர்வேலன் காதல். சுந்தரபாண்டியன் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கி உள்ளார். இந்தப் படம் வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் படத்தை கடந்த சில நாட்களுக்கு முன் உதயநிதி ஸ்டாலின் பார்த்தார். படம் நன்றாக வந்திருப்பதாக பிரபாகரனை பாராட்டிய உதயநிதி, அவருக்கு இன்னோவா காரை பரிசாக அளித்தார். இதுபற்றி பிரபாகரனிடம் கேட்டபோது, படத்தை பார்த்து மகிழ்ந்த உதயநிதி, என்னை பாராட்டினார். பிறகு கார் பரிசளித்து எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அடுத்தும் அவரது ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கே படம் இயக்குகிறேன் என்றார்.

இனியதமிழ் வெள்ளித்திரை | இனியதமிழ்திரட்டி | பூம்புகார் அங்காடி

%d bloggers like this: